ஜனாதிபதி அவுஸ்திரேலியா : பிரதமர் அமெரிக்கா
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மறுநாள் செவ்வாய்கிழமை உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியா செல்வதுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவிற்கு செல்கின்றார். மே மாதம் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை ஜனாதிபதி அவுஸ்திரேலிய விஜயத்தில் கலந்து கொள்வதுடன் அங்கு பலதரப்பட்ட நிகழ்வுகளிலும் பங்கு பற்ற உள்ளார். மேலும், அவுஸ்திரேலியா வாழ் இலங்கையர்களை சந்தித்து விசேட உரையாற்றவும் உள்ளார்.
இதன்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஆட்சி நிறைவ.ைடந்து தற்போது குடியரசு கட்சியின் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்பின் ஆட்சியில் இலங்கையின் தலைவர் ஒருவர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்வது இதுவே முதற் தடவையாகும். எனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அமெரிக்க விஜயம் இரு நாடுகளுக்கும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.
தொடர்ந்தும் மூன்று நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல தரப்பு சந்திப்புகளிலும் கலந்து கொள்ள உள்ளார். எவ்வாறாயினும் அமெரிக்காவின் புதிய ஆட்சியில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக இலங்கை கடந்த நாட்களில் அக்கறையுடன் செயற்பட்டு வந்தது. இரு நாடுகளிலுமே ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இரு தரப்பு வெளிவிவகார கொள்கைகளில் புரிதலுடன் செயற்பட வேண்டியுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் பிரதமர் அமெரிக்கா செல்கின்றமை முக்கியமானதாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply