மே 21 இராஜிவ்காந்தி படுகொலை நாள்
நவீன இந்தியாவின் சிற்பி, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பேரன், இரும்பு பெண்மணி இந்திராகாந்தியின் மகன் என்ற அடையாம்மட்டும்மல்ல இந்தியாவின் இளம் தலைவர், பிரதமர் என்கிற அடையாளத்தோடு இருந்தவர் இராஜிவ்காந்தி.1944 ஆகஸ்ட் 20ந் தேதி மும்பையில் இந்திராகாந்திக்கும் – பெரோஸ்கான்காந்திக்கும் பிறந்தவர் இராஜிவ்காந்தி. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக அவரது தாத்தா நேரு பதவியில் அமர்ந்தபோது, அவரது அப்பா பெரோஸ்கான்காந்தி பாராளமன்ற உறுப்பினராக இருந்தார். மாமனார் பிரதமர் என்பதற்காக தவறை சுட்டுக்காட்டாமல் இருந்ததில்லை. இது குடும்பத்தில் புழல் வீசியது.
இராஜிவ்காந்தி இருவரும் கலந்த கலவை. எதையும் அதிரடியாக முடிவெடுப்பார். டோராடூனில் உள்ள பிரபல பள்ளியில் பள்ளி படிப்பை படித்தவர், பின்னர் இமயமலையின் அடிவாரத்தில் உள்ள டூன் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து கேம்பிரிட்ஜ், டிரினிட்டி கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் படிப்பில் சேர்ந்தவர் பின்னர் அங்கிருந்து லண்டனில் உள்ள இம்பீரியில் கல்லூரிக்கு மாறினார்.
கேம்பிரிட்ஜ்ல் படித்தபோதே இத்தாலியை சேர்ந்த சோனியாவை காதலிக்க அது குடும்பத்தில் பெரும் புயலை உருவாக்கியது. நாட்டை வழி நடத்தும், சுதேசி என முழங்கிய குடும்பத்திற்க்கு வெளிநாட்டு மருமகளா என பிரதமராக இருந்த இந்திராகாந்தி தயங்கினார். அரசியல், வரலாறு பற்றிய அக்கறையற்ற இராஜிவ்க்கு, படிப்பு, காதல், அமைதியாக குடும்ப வாழ்க்கை இதில் தான் கவனம் இருந்தது. இதை தெளிவாக எடுத்துரைத்தவர், மணந்தால் சோனியா என்பதில் உறுதியாக இருந்தார். இறுதியில் அதில் வெற்றி பெற்று 1968ல் காதலி சோனியா, இராஜிவ்காந்தியின் மனைவி சோனியாகாந்தியாக மாறினார்.
டெல்லியில் விமான ஓட்டியாக பதிவு செய்த இராஜிவ்காந்தி இந்தியன் ஏர்லென்ஸ் விமானத்தின் விமானியாக பணியாற்றி வந்தார். 1980ல் இந்திராகாந்தியின் இளைய மகனும், அரசியல்வாரிசாக விளர்ந்து வந்த சஞ்சய்காந்தி, விமான பயிற்சியின் போது விபத்தில் சிக்கி இறந்தார். இந்த இறப்பு இராஜிவ்காந்தியின் வாழ்க்கை பாதையை திசை திருப்பியது.
அமைதியான வாழ்க்கையை விரும்பிய இராஜிவ்காந்தியை அரசியலுக்கு வரவைத்தது. பிரதமரான இந்திராகாந்தியுடன் இருக்க வேண்டிய கட்டாயம். சஞ்சய்காந்தி, எம்.பியாக வெற்றி பெற்ற அமோதி தொகுதி இப்போது காலியாக இருந்தது. அந்தயிடத்தில் ராஜிவ்காந்தியை நிறுத்தி வெற்றி பெற வைத்தார் இந்திரா. அதோடு, காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் பதவியையும் வழங்கினார். கட்சி பணியாற்றிக்கொண்டு இருந்தபோது, சீக்கிய மதவெறியர்களால் 1984 அக்டோபர் 31ந்தேதி தனது பாதுகாவலர்களாளயே பிரதமர் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பழிவாங்க, சீக்கியர்கள் மீது காங்கிரஸார் பாய்ந்தபோது, அமைதியாகவே இருந்தார் இராஜிவ்காந்தி. 40 வயதான அந்த ராஜிவ்வே, பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் பிரதமரானார்.
உலகின் இளம்வயது பிரதமராக வலம் வந்த இராஜிவ்காந்திக்கு, நாடு அமைதியாக இருக்க வேண்டும் என்பதில் பேராசை. அது சாத்தியமற்றது என்பது அவர் குறுகிய காலத்தில் பெற்ற அரசியல் அறிவு அவருக்கு விளக்கவில்லை.
காஷ்மீர் விவகாரமாகட்டும், வடகிழக்கு மாநில விவகாரமாகட்டும், நக்சல்பாரி பிரச்சனையாகட்டும், இலங்கை ஈழத்தமிழர் விவகாரமாகட்டும் அதன் அடிநாத வரலாறு தெரியாமல் தான் நினைத்த சமாதானம் நடக்க வேண்டும் என விரும்பினார். இந்த விருப்பம்மே பதவியில் இல்லாத காலத்தில் அவரது உயிரை கோரமாக எடுத்தது.
இந்திராகாந்தி படுகொலையால் பிரதமர் பதவிக்கு வந்த இராஜிவ்காந்தி அடுத்து வந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியை பெரும் வெற்றி பெற வைத்த அதன் தலைவரான இராஜிவ்காந்தி, இண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். இப்போது அவர் மீது போப்பர்ஸ் இராணுவ பேர ஊழல் விவகாரம் பூதகரமானது. இதனால் அடுத்து வந்த பொதுத்தேர்தலில் பெரும் வெற்றி பெறவில்லை. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடையாது. அதிக எம்.பிக்கள் வைத்திருந்த காங்கிரஸ் ஆட்சியமைக்க மறுத்தது. இதனால் ஐ.கே.குஜ்ரால், சந்திரசேகர் என மாறி மாறி பிரதமர் பதவியில் அமர்ந்தனர். தன்னை வேவு பார்க்க பிரதமர் சந்திரசேகர் உளவுத்துறையை ஏவியுள்ளார் என்ற குற்றசாட்டை வைத்து சந்திரசேகர் ஆட்சியை கவிழ்த்தார்.
1991 ஆம் ஆண்டு இந்தியாவில் பொதுத்தேர்தல். முன்னால் பிரதமரான இராஜிவ்காந்தி தமிழகத்துக்கு தேர்தல் சுற்றுப்பயணம் வந்தார். காஞ்சிபுரத்தை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் என்கிற இடத்தில் அரக்கோணம் தொகுதி எம்.பி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம். இதற்காக கேரளாவில் ஒரு பிரச்சாரத்தை முடித்துவிட்டு சென்னைக்கு விமானத்தில் கிளம்பிய இராஜிவ்காந்தி, சென்னை மீனம்பாக்கத்தில் இருந்து கார் மூலம் ஸ்ரீபெரும்புதூர்க்கு வந்தார்.
காரைவிட்டு இறங்கிய இராஜிவ்காந்திக்கு மேடையருகே ஒரு பெண் இராஜிவ்காந்திக்கு சந்தனமாலை அணிவித்துவிட்டு கீழே குனிய, டமார் என்கிற சத்தம் மட்டும்மே கேட்டது. அடுத்த ஒரு மணி நேரத்துக்கு பின் இராஜிவ்காந்தியின் உடல் சதைகளை சுரண்டி தான் எடுக்க வேண்டியதாக இருந்தது.
1991 மே 21ந்தேதி முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி மனித வெடிகுண்டால் படுகொலை செய்யபட்டுயிருந்தார். இந்த தகவலை கேட்டு உலகம்மே அதிர்ந்தது. இந்த படுகொலைக்கு காரணம் இலங்கை மண்ணில் விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் என்றது புலனாய்வு அமைப்புகள். விடுதலைப்புலிகளை அடக்க இந்திய இராணுவத்தை அனுப்பியதால் கோபமான புலிகள், இதற்கு காரணமான இராஜிவ்காந்தியை குறிவைத்து இந்த கோர சம்பவத்தை நடத்தியுள்ளனர். இந்த படுகொலையில் நேரடியாக, மறைமுகமாக சம்மந்தப்பட்டவர்கள் என தமிழகம் மற்றும் ஈழத்தை சேர்ந்தவர்கள் மீது வழக்கு நடைபெற்றது. பலர் மேல்முறையீட்டில் விடுதலையாகினர். 6 பேர் மட்டும் மரண தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது அது ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டு சிறையில் உள்ளனர். இந்த படுகொலை வழக்கில் இன்னும் பலப்பல மர்ம முடிச்சிகள் அவிழ்க்கப்படாமல் உள்ளன என்பது குறிப்பிடதக்கது.
இராஜிவ்காந்தியின் மரணம், இந்தியாவின் அரசியல் போக்கையே மாற்றிவிட்டது. இந்த மரணத்தால் அதன்பின் வந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் நேரு குடும்பத்தில் இருந்து கடந்த 27 ஆண்டுகளாக அந்த பிரதமர் நாற்காலியில் யாராலும் அமர முடியவில்லை, நேரு குடும்பத்துக்கு வெளியில் இருந்து தான் பிரதமர் நாற்காலியில் அமர்கின்றனர்.
இராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளை கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக இந்திய அரசு கடைபிடிக்கிறது என்பது குறிப்பிடதக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply