நிவாரண நடவடிக்கை குறித்து பிரான்ஸ், பிரித்தானியா ஆராய்வு

அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான படை நடவடிக்கைகளினால் இடம்பெயரும் பொதுமக்களுக்கு உதவுவதற்கான கூட்டு நடவடிக்கையொன்றை பிரித்தானியாவுடன் இணைந்து மேற்கொள்ளும் யோசனையொன்றை பிரான்ஸ் முன்மொழிந்துள்ளது. நடிவடிக்கையொன்றை ஆரம்பிக்க நாம் முயற்சிப்போம் என்று கூறியுள்ள பிரான்ஸ் நாட்டு வெளிவிவகார அமைச்சர் பேர்னார்ட் கொளச்னர், இதுகுறித்து பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்டுடன் கலந்துரையாடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

மக்கள் கடற்கரையோரங்களில் கூடியுள்ளதுடன், சிலர் கடலுக்குள் தாண்டுபோவதாகக் கூறிய அவர், இவர்களை மீட்பதற்காக பிரான்ஸ் மற்றும் பிரித்தானியப் படகுகள் அனுப்பிவைக்கப்படும் என்று கூறியுள்ளர். பல்வேறு உதவிப் பணிகள் மேற்கொள்ளப்படும்போதும், மக்கள் களைப்படைந்து போயுள்ளார்கள் என்று குறிப்பிட்ட அவர், எனினும், படை நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளும் எண்ணம் தமக்குக் கிடையாது என்று தெரிவித்தார்.

பொமக்களின் நிலை குறித்து அமெரிக்காவும், செஞ்சிலுவைச் சங்கமும் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருப்பதுடன், சிறு கூடாரங்களுக்குள் நெருக்கமாக இருக்கும் சுமார் 65,000 பேரின் நிலை குறித்து மிகுந்த அச்சமடைவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் பொதுமக்களைப் பாதுகாக்கப் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும் என்று ஏற்கனவே நோர்வே அமைச்சரும், இலங்கை சமாதான முயற்சிகளில் மத்தியஸ்தம் வகித்தவருமான எரிக் சொல்ஹேய்ம் தெரிவித்துள்ளார்.

இலங்கை நிலவரம் தொடர்பில் பாதுகாப்புச்சபையைக் கூட்டி ஆராய பிரான்ஸ், பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply