வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: சர்வதேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என ஐ.நா.சபை கண்டனம்
உலக நாடுகளின் கண்டனங்களை பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதித்து வரும் நிலையில், இது பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என ஐ.நா சபையின் செய்தி தொடர்பாளார் தெரிவித்துள்ளார். சர்வதேச அமைப்புகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ச்சியாக பல்வேறு கட்ட ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா, ஐ.நா., ஐரோப்பிய யூனியன் உள்ளிட்டவை வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதிக்கும் முயற்சியில் தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில், வடகொரியா அடையாளம் தெரியாத குறைந்த அளவில் செல்லும் ஏவுகணையை நேற்று சோதனை செய்ததாக தகவல்கள் வெளியானது.
தெற்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள புக்சங் பகுதியிலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை 500 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து, தங்கள் நாட்டில் கிழக்கு பகுதியில் உள்ள கடலில் விழுந்ததாக தென்கொரியா பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறினர்.
வடகொரியாவின் இந்த அடாவடிக்கு ஐ.நா சபையின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், “ வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகள் பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வடகொரியாவின் நடவடிக்கைக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை கூடி, அந்நாட்டின் மீது வலுவான தடை கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply