உலக சுகாதார அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆப்ரிக்க நாட்டவர்
உலக சுகாதார அமைப்பின் தலைவராக முதன் முறையாக ஆப்ரிக்க நாடான எத்தோப்பியாவைச் சேர்ந்த டெட்ரோஸ் ஆதனாம் கேப்ரியேசஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுவிச்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பானது ஐ.நா சபையின் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது. உலகமுழுவதும் உள்ள நாடுகளில் சுகாதார பணிகளை ஒருங்கினைப்பது, தொற்றுநோய் பரவும் சமயங்களில் உரிய பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது, வறுமையான நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை அளித்து வருகிறது.
இந்த அமைப்பின் தற்போதைய தலைவர் மார்கரத் சானின் பதவி வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய தலைவரை தேர்ந்தடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. 186 உறுப்பினர்களின் ஆதரவுடன் எத்தோப்பிய நாட்டைச் சேர்ந்த டெட்ரோஸ் ஆதனாம் கேப்ரியேசஸ் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஐ.நா அங்கமுடைய அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இதுவே முதன் முறையாகும். கேப்ரியேசஸ் இதற்கு முன்பாக எத்தோப்பியாவின் சுகாதாரம் மற்றும் வெளியுறவு மந்திரியாக இருந்துள்ளார். தெற்கு ஆப்ரிக்க நாடுகளில் பரவி வரும் எபோலா காய்ச்சலை கட்டுப்படுத்துவது கேப்ரியேசஸ்-க்கு பெரும் சவாலான பணியாக இருக்கும்.
வரும் ஜூன் மாதம் பதவியேற்க இருக்கும் கேப்ரியேசஸ் ஐந்தாண்டுகள் அப்பதவியை வகிப்பார். இப்பதவிக்கான தேர்தலில் பிரிட்டனைச் சேர்ந்த டேவிர் நேபரோ, பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் மந்திரி சானியா நிஸ்தார் ஆகியோர் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply