ஜெர்மனியர்கள் ரொம்ப மோசம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்தால் சலசலப்பு
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது வெளிநாட்டு பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று பிரஸ்சல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் ஜெர்மனியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக ஜெர்மன் வார இதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.‘ஜெர்மனியர்கள் மிகவும் மோசமானவர்கள். அமெரிக்காவில் எண்ணற்ற கார்களை விற்பனை செய்து கொள்ளை வருமானம் ஈட்டுகின்றனர். இதனை தடுத்து நிறுத்துவோம்’ என டிரம்ப் பேசியதாக தெரிகிறது.
அப்போது, குறுக்கிட்ட ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜங்கர், தடையற்ற வர்த்தகத்தால் ஒவ்வொருவரும் பயனடையத்தான் செய்வார்கள் என ஜெர்மனிக்கு ஆதரவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
தேர்தலுக்கு முன்புகூட ஜெர்மனியையும், அந்நாட்டின் சான்சலர் ஏஞ்சலா மெர்கலையும் டிரம்ப் தாக்கிப் பேசினார்.
இத்தாலியில் இன்று நடைபெற உள்ள ஜி7 மாநாட்டின்போது ஏஞ்சலா மெர்கலை டிரம்ப் சந்திக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply