சிங்கள, பௌத்த இனவாதம் தலைதூக்கியுள்ளது : மங்கள சமரவீர

சிங்கள பௌத்த வாதத்தை அடிப்படையாக் கொண்டு நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்கியுள்ளதாக புதிய நிதியமைச்சரும், ஊடககத்துறை அமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக தெற்கில் முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் மற்றும் மத ஸ்தலங்கள் மீது சிங்கள பேரினவாதிகளால் தொடர்ச்சியாக தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அமைச்சர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

வல்வெட்டித்துறையில் இருந்து பாக்கு நீரிணை ஊடாக கோடிக்கரையை அடைந்து சாதனையை நிலை நாட்டிய ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக நீச்சல்தடாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்;

எமது புத்தபகவானின் பெயரில் சிங்கள பௌத்த பிரிவினைவாதம் தலைதூக்க முயற்சிப்பதை அவதானிக்கக்கூடியதமாக இருக்கின்றது. சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையில் மீண்டும் அவநம்பிக்கையை ஏற்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. வங்குரோாத்து நிலையை அடைந்துள்ள அரசியல் சக்திகள் மீண்டும் மக்களுக்கு இடையில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன.

நாம் பிரிவினைவாதிகளை தோற்கடிக்க ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். நாடு என்ற வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply