இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஐக்கிய இலங்கை என்ற அடிப் படையில் அமைவதே நடைமுறைச் சாத்தியமானது
புதுமாத்தளனில் படையினர் மேற் கொண்ட அதிரடி நடவடிக்கை தமிழ் அரசுவழிச் சமூகத்தில் புதிய சிந்தனையின் அவசியத்தை வலி யுறுத்துகின்றது. இந்த நடவடிக்கையின் காரணமாகப் பெருந்தொகையினரான மக்கள் புலிகளின் பிடியிலிருந்து விடுவி க்கப்பட்டமை உடனடி நிகழ்வு. தமிழ் மக்கள் தங்கள் அரசியல் செல்வழியைச் சரியான தடத்தில் அமைத்துக்கொள்ள வேண்டியது தொடர்ந்து இடம்பெற வேண்டிய நிகழ்வு.
கிட்டத்தட்டக் கால் நூற்றாண்டு காலம் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் புலிகளின் கையில் இருந்த தென்பதை நாம் ஏற்காதிருக்க முடி யாது. மக்களின் அங்கீகாரத்துடன் இத் தலைமை மாற்றம் இடம்பெறவில்லை. தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று புலிகள் தங்களை இனங்காட்டிய போதிலும் ஆயுத பலத்தின் மூலம் உருவாக்கப்பட்ட செயற்கையான தலை மைப் பாத்திரமே அது. செயற்கைத் தலைமையின் வழிகாட்டலில் தமிழ் மக்கள் அடைந்த இன்னல்கள் ஏராளம்.
அரசியல் தீர்வு முயற்சி பல வருடங்க ளுக்குப் பின் தள்ளப்பட்டுவிட்டது. தமிழ் மக்கள் தங்கள் சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர நேர்ந்தது. இடம்பெயர்ந்தவர்களில் ஒரு பகுதியினர் அகதி முகாம்களிலும் மற்றையோர் கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் வாடகை வீடுகளிலும் சிரமத்துடன் வாழ்கின்றார்கள்.
நாடுபூராவிலும் கூடு தலான பாதுகாப்பு வலயங்கள் அமைக் கப்பட்டுள்ளன. இவையெல்லாம் புலிகளின் செயற்கைத் தலைமை அரசியல் களத்துக்கு வந்த பின் இடம்பெற்ற நிகழ்வுகள்.
தமிழ் மக்களால் தெரிவு செய்யப் பட்ட மிதவாதத் தலைவர்களும் புலிக ளின் தலைமையின் கீழ் அணிதிரண்ட பின்னர் நிலைமை மிகவும் மோசமா கியது. தனிநாடு என்ற நடைமுறைச் சாத்தியமற்ற நிகழ்ச்சி நிரலுக்காக நடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வைப் பறிகொடுக்க இவர்கள் தயாராகியமை மிகவும் துரதிஷ்டமானது.
புலிகளே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்றும் அவர்களின் தனிநாட்டுக் கொள்கையைப் பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள் என்றும் கட்டி வளர்க்கப்பட்ட பொய்த் தோற்றம் படையினரின் இராணுவ நடவடிக்கை ஆரம்பித்த பின் ஒன்றன்பின் ஒன்றாக உடைந்துவிட்டது.
புலிகளுக்கு ஆதரவாக மக்கள் எந்த இடத்திலும் அணிதிரளவில்லை. புது மாத்தளனில் உள்ளவர்கள் புலிகளுக்கு ஆதரவாகவே தங்கியிருக்கின்றார்கள் என்ற பொய்மையும் கடந்த திங்கட்கிழமை உடைந்துவிட்டது. இப்போது தமிழ் மக்களின் அரசியலில் புதிய சிந்தனையும் புதிய தலைமையும் தேவை.
இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஐக்கிய இலங்கை என்ற அடிப் படையில் அமைவதே நடைமுறைச் சாத்தியமானது. இத்தீர்வை அடைவதற்குச் சரியான வழிமுறையைப் பின்பற்றக் கூடிய தலைமை இருக்கவேண்டியது அவசியம்.
யதார்த்தத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு படிப்படியாகத் தீர்வு முயற்சியை முன்னெடுக்கும் திறமையும் செயலீடுபாடும் உள்ள தலைமையே இன்றைய தேவை. பழைய தலைவர்களை ஒதுக்கித்தள்ள வேண்டுமென்பது இதன் அர்த்தமல்ல. ஐக்கிய இலங்கை யில் யதார்த்தத்துக்கு அமைவான வழிமுறைகளுக்கூடாக அரசியல் தீர்வு என்ற சிந்தனை புதிய தலைமைக்கான பிரதான முன்தேவை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply