ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரியங்கா

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி வாத்ரா கூறியுள்ளார். நாட்டின் முன்னாள் பிரதமரைக் கொன்றவர்கள் என்ற நிலையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்று அவர்   குறிப்பிட்டுள்ளார். யுத்தப் பிரதேசங்களில் சிக்குண்டுள்ள மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை தான் புரிந்துகொண்டுள்ளதாகவும், அம்மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய இந்தியா முயல வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி வாத்ரா தெரிவித்துள்ளார்.

சமீப காலங்களில் ராஜீவ் கொலை வழக்கு பற்றிய தனது கருத்துக்களை பிரியங்கா சற்று வெளிப்படையாகவே தெரிவித்துவருகிறார்.

வேலூர் சிறைக்கு சென்று ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினியை சந்தித்திருந்த பிரியங்கா காந்தி இக்கொலை தொடர்பாக யார் மீதும் பழி வாங்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.ஆனால் அவரின் சகோதரரான ராகுல் காந்தி ராஜிவ் காந்தி கொலை தொடர்பாக தமக்கு இன்னமும் நியாயம் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply