யுத்த நிறுத்தத்துக்குப் விடுதலைப் புலிகள் தயாராம்
யுத்த நிறுத்தம் செய்வதற்கு நாம் தயாராகவுள்ளோம். அதற்கு நாம் என்றும் தயங்கப் போவதில்லையென விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் ப. நடேசன் தெரிவித்துள்ளர்.
இலங்கை அரசாங்கம் மட்டுமன்றி விடுதலைப் புலிகளும் யுத்த நிறுத்தம் செய்ய வேண்டுமென தமிழக முதல்வர் மு.கருணாநிதி உட்பட தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் விடுத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையிலேயே ப.நடேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இணையத் தளமொன்றுக்கு ப.நடேசன் வழங்கிய பேட்டியொன்றில் மேலும் தெரிவித்துள்ளதாவது: யுத்த நிறுத்தத்தை நாங்கள் எப்போதும் விரும்புகிறோம். இலங்கை அரசாங்கம்தான் தன்னிச்சையாக ரத்துச் செய்து யுத்தத்தை ஆரம்பித்தது. என்றும் தெரிவித்துள்ளார் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் ப. நடேசன் .
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply