கிழக்கு காங்கோ சிறையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் உயிரிழப்பு – 900 கைதிகள் தப்பியோட்டம்
காங்கோவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பெனி நகரத்தின் சிறையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும், சுமார் 900க்கும் அதிகமான கைதிகள் சிறையில் இருந்து தப்பித்துள்ளதாக காங்கோ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சிறை தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 8 பேர் சிறை காவலர்கள், மேலும் 30க்கும் அதிகமான சிறை காவலர்கள் சிறையிலேயே இருப்பதாக வடக்கு கிவு பிராந்திய ஆளுநரான ஜூலியன் பலூகு தெரிவித்துள்ளார். தாக்குதலைத் தொடர்ந்து பெனி மற்றும் புடெம்போ பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ராணுவம் மற்றும் போலீசார் மட்டுமே வெளியில் செல்லலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தாக்குதலை நடத்தியவர்கள் குறித்த விரிவான தகவல்கள் இன்னும் அறியப்படவில்லை.
முன்னதாக கின்ஷாசா பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர் என காங்கோ போலீசார் தெரிவித்துள்ளனர். இதே போல் மே மாதம் கிறிஸ்துவ செக்ட் உறுப்பினர்கள் நடத்திய தாக்குதலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிறிஸ்துவ தலைவர் தப்ப வைக்கப்பட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply