தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் பாதிப்பிலிருந்து விடுபட முடியாது :  ஐ.நா. செயலாளர் நாயகம்

தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் அதன் பாதிப்பிலிருந்து விடுபட அதிக விலை கொடுக்க நேரிடுவதுடன், இந்த ஆதரவு பல்வேறு இடங்களை பாதித்து பின்னர் தனது சொந்த நாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்துமென ஐ.நா. செயலாளர் நாயகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ கட்டாரெஸ் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு நேற்று விஜயம் செய்தார்.

காபூலில் ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி மற்றும் அந்நாட்டு தலைமை நிறைவேற்று அதிகாரி அப்துல்லா ஆகியோரை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஐ.நா. செயலாளர் நாயகம் கட்டாரெஸ் தனது விஜயம் குறித்து விளக்கமளித்தார். இதன்போது தீவிரவாதத்திற்கு நிதி உதவி மற்றும் தஞ்சம் அளிப்பது தொடர்பாக ஐ.நா.வில் ஆப்கானிஸ்தான் அளித்த ஆதாரங்கள் மற்றும் கோப்புகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து கட்டாரெஸ் கூறுகையில்:-

தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட இரண்டு நாடுகளுக்குமிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்த என்னுடைய அலுவலகத்தை பயன்படுத்துவேன்.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் தொடர்ச்சியாக தீவிரவாத தாக்குதலுக்குள்ளாகின்றன. அதேபோல் உலகின் பல்வேறு பகுதிகளிலும் தீவிரவாத தாக்குதல்கள் இட்பெறுகின்றன. அதை எதிர்த்து அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்றார்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply