ஈராக்கில் தற்கொலை தாக்குதலில் 13 பேர் பலி
ஈராக்கில் தலைநகர் பாக்தாத்தில் சமீபத்தில் நடந்த மதக்கலவரத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு நிவாரண உதவிகள் அளிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஒரு தற்கொலை தீவிரவாதி தன் உடலில் கட்டிஇருந்த வெடிபொருள்களை வெடிக்கச் செய்தார். இதில் 13 போலீஸ்காரர்கள் பலியானார்கள். 32 பேர் காயம் அடைந்தனர். வன்முறை சம்பவங்கள் கடந்த ஆண்டு முதல் குறைந்து விட்டது. இருந்தபோதிலும், தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல்களை நடத்திவருகிறார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply