சதித் திட்டம் கொழும்பிலேயே தீட்டப்பட்டது : சி.வி.
தன்னை பதவியிலிருந்து நீக்கும் சதித்திட்டம் கொழும்பிலேயே தீட்டப்பட்டிருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருக்கின்றார்.வடமாகாண முதலமைச்சரை பதவியிலிருந்து அகற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிக்கும் வகையிலும் நேற்று யாழப்பாணத்தில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தான் வடமாகாண முதலமைச்சர் பதிவியில் நீடிக்க போவதில்லை என்பதை முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா சில மாதங்களுக்கு முன்னரே தெரவித்ததையும் முதலமைச்சர் கோடிட்டுகாட்டியுள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையினரால் கர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்ற நிலையில் நேற்று நல்லூர் ஆலயத்திற்கு முன்னால் முதலமைச்சருக்கு ஆதரவாக இந்த போராட்டம் இடம்பெற்றது.
நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பேரணியாக முதலமைச்சரின் இல்லத்திற்கு சென்றிருந்தனர்.
இந்த நிலையில் பேரணியாக சென்றவர்களை சந்தித்த முதலமைச்சர் அங்கு உரையாற்றியிருந்தார்.
பேரணியில் ஈடுபட்டடிருந்தவர்கள் கூட்டமைப்பின் உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால் கோசங்கள் எழுப்பப்பட்டிருந்தன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply