அமெரிக்க கடற்படைக் கப்பல் விபத்துக்குள்ளானதில் 7 கடற்படை உறுப்பினர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யப்பானின் யொகுஷ்கா கடற்பகுதியில் பிலிப்பைனுக்குச் சொந்தமான கொள்கலன் கப்பல் ஒன்றுடன் மோதியதனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பலில் பயணித்த கட்டளைத் தளபதி உட்பட ஏனைய உறுப்பினர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் காயமடைந்தவர்கள் ஹெலிகொப்டர் மூலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் யுத்த கப்பல் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் காணப்படும் அதி நவீன தொழில்நுட்பத்துடன் காணப்படும் கப்பல் விபத்துக்குள்ளாகும் வரையில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்காமைக்குரிய காரணம் மர்மமாகவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply