ரெலோ தலைவர் செல்வம் சிவாஜியுடன் விக்கியை சந்திப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் தலைமைகளுடன் பேச்சுக்களை நடத்தி எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்புவதற்கான கலந்துரையாடல் முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நேற்று நண்பகல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் – ரெலோ – தலைவர் செல்வம் அடைக்கலநாதன் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளருமான எம்.கே சிவாஜிலிங்கத்துடன் முதலமைச்சரை சந்தித்தனர்.
அதன் பின்னர் மாலையளவில் புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.கே சிவாஜிலிங்கம் ஆகியோருடன் செல்வம் அடைக்கலநாதன் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்.
அச் சந்திப்பு தொடர்பில் பின்னர் கருத்து தெரிவித்த முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் கடிதம் அனுப்பி இருந்தார். அந்த கடிதத்திற்கு பதில் அனுப்புவது தொடர்பிலேயே இக் கட்சி தலைவர்களுடன் பேச்சு நடத்தினேன்.
அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஊடாக சம்பந்தனுக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளேன். நான் அனுப்பிய கடிதத்திற்கான பதிலின் ஊடாகவே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் முடிவெடுக்க முடியும். இரு அமைச்சர்கள் தொடர்பில் எழுத்து மூல உறுதி மொழியினை தந்தால் அதனை ஏற்க தயாராக உள்ளேன் என மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply