சவுதி அரேபியாவில் இருந்து 41 லட்சம் இந்தியர்கள் வெளியேறும் அபாயம்: புதிய வரி விதிப்பால் பாதிப்பு

எண்ணை வளம் மிகுந்த சவுதி அரேபியாவில் லட்சக்கணக்கான வெளி நாட்டினர் தங்கி பணி புரிகின்றனர். அவர்களில் இந்தியர்கள் மட்டும் 41 லட்சம் பேர் உள்ளனர்.அவர்களில் ஏராளமானோர் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கியுள்ளனர். இந்த நிலையில் சவுதி அரேபியாவில் பணிபுரியும் தொழிலாளர்களுடன் தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கு புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டினர் மாதம் 100 ரியால் செலுத்த வேண்டும். இது வருகிற ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மாதம் 5 ஆயிரம் ரியால் அதாவது ரூ.90 ஆயிரம் சம்பாதிக்கும் வெளிநாட்டினருக்கு சவுதி அரேபிய அரசு ‘குடும்ப விசா’ வழங்குகிறது. அதன்படி அங்கு தங்கியிருக்கும் தொழிலாளி தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு என 3 பேருக்கு மாதம் ரூ.300 ரியாஸ் (ரூ.5400) வரி செலுத்த வேண்டும்.

இது வருகிற 2020-ம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொழிலாளர்களுக்கு கட்டுப்படியாகாது என்பதால் இந்தியாவை சேர்ந்த 41 லட்சம் பேர் சவுதி அரேபியாவில் இருந்து வெளியேறும் அபாயம் உள்ளது. கடந்த 4 மாதங்களாக இந்தியர்கள் தங்கள் குடும்பத்தினரை அங்கிருந்து அனுப்பி வைக்க தொடங்கி விட்டனர்.

வருகிற ஜூலை 1-ந் தேதி முதல் பானங்கள் மற்றும் புகையிலையின் விலை 100 சதவீதம் உயருகிறது. அதனால் குடும்பம் நடத்த முடியாத நிலை உள்ளது. மேலும் கச்சா எண்ணையின் விலை குறைந்து விட்டது. இதனால் அங்கு பெரும்பாலான கம்பெனிகள் மூடப்பட்டு வருகின்றன.

இதனால் வேலை இழக்கும் அபாயமும் உள்ளது. பொதுவாக அங்கு ஐ.டி., கட்டுமானம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணிகளில் பெரும்பாலான இந்தியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களும் அங்கிருந்து வெளியேறும் முடிவில் உள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply