சமூகவலைதள மோகம் குழந்தையை 15வது மாடியில் இருந்து வீசுவதாக மிரட்டல் விடுத்த தந்தை
அல்ஜீரியாவில் தந்தை தனது பேஸ்புக்கில் தனக்கு அதிக லைக்குகள் வேண்டும் என்பதற்காக தனது குழந்தையை உயரமான கட்டிடத்தில் இருந்து போடுவது போல் புகைப்படும் எடுத்து உள்ளார்.தந்தையை ஒருவர், 15 வது மாடியின் ஜன்னலுக்கு வெளியே தனது குழந்தையைப் பிடித்து கீழே போடுவது போல் புகைப்படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். இதற்கு ”1000 லைக்குகள் வேண்டும், இல்லையெனில் குழந்தையை வெளியே விட்டுவிடுவேன்” என்ற வாசகத்துடன் குழந்தையின் தந்தை இதனை வெளியிட்டார்.
இதனை பார்த்த சமூகவலைதளவாசிகள் குழந்தையை இப்படி துஷ்பிரேயோகம் செய்கிறார் என கொந்தளித்துள்ளனர். மேலும் இவர் கைது செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த தகவல் போலீசாருக்கு தெரியவந்ததையடுத்து,அந்த நபர் மீது குழந்தையின் பாதுகாப்புக்கு பாதிப்பு உண்டாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜியர்ஸில் உள்ள ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பின் 15-வது மாடியில் இருந்து, தனது குழந்தையை பெயர் குறிப்பிடப்படாத இந்நபர் தொங்கவிட்டதாக அல் அராபியா செய்திவலைத்தளம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply