அமெரிக்க தாக்குதலில் ஐ.எஸ் இயக்கத்தின் தலைமை மதகுரு பலி
வளைகுடா நாடான சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி ஆசாத் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினரும் அரசுப்படைகள் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர்.இதனிடையே ரஷ்ய கூட்டுப்படைகள் நடத்திய வான் தாக்குதலில் அந்த அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியது.
ஆனால் இந்த தகவலுக்கு இதுவரை ஐ.எஸ் இயக்கம் மறுப்பு தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் ஈராக் நாட்டின் பாக்தாத் நகரை தலைமையகமாக கொண்டு இயங்கும் ஐ.எஸ் இயக்கத்தின் தலைமை மதகுரு துர்கி பினாலி, கடந்த மே மாதம் சிரியாவின் மயாதீன் நகரில் பதுங்கியிருக்கும் போது, அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான் தாக்குதலில் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply