சென்னை நீதிமன்றத்தில் ஆஜரானார் சசிகலா
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தல் இன்று பகல் 12 மணி அளவில் வீடியோ காண்பரஸ் மூலம் ஆஜரானார் சசிகலா.சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் சசிகலா, இளவரசி, சுதாகரன். அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சுதாகரன் நேற்று சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
பாஸ்கரனும் ஆஜரானார். இந்த நிலையில் இந்த வழக்கில் வீடியோ காண்பரஸ் மூலம் ஆஜரானார் சசிகலா. தனியார் தொலைக்காட்சிக்கு சாதனங்கள் வாங்கியதில் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply