ஐ.நா. மனித உரிமை பேரவை சிபாரிசுகளை ஒருங்கிணைக்க அமைச்சரவை குழு
ஐக்கிநாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் சிபாரிசுகளை ஒருங்கிணைப்பதற்கான அமைச்சரவை குழு நியமிக்கப்படவுள்ளது.2015ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கையினால் உடன்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்காக மேலும் இரண்டு வருட கால அவகாசங்களை வழங்குவதற்கு 2017ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டத்தொடரில் இணக்கம் காணப்பட்டது.
இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை மற்றும் ஏனைய அங்கத்துவ நாடுகளிடம் தொடர்ந்தும் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் ஏனைய ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வதற்கும் இதற்காக செயற்படும் பொழுது பல்வேறு அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்ளை இணைத்தும் பின்னர் மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக நடைமுறை ஒன்றை வகுக்கும் நோக்கில் பிரதமர் தலைமையிலும் சம்பந்தப்பட்ட ஏனைய அமைச்சர்களின் ஒத்துழைப்புடனும் குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது.
இந்த குழுவுக்கு ஒத்துழைப்பினை வழங்குவதற்காகவும் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பற்கான ஆலோசனையை முன்னிலைப்படுத்தி பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply