பறக்கும் தட்டுகளை பயன்படுத்தி போதைபொருள் கடத்திய அமெரிக்க புலனாய்வு அமைப்பு
அமெரிக்காவின் விர்ஜினாவில் உள்ள மனாசஸ் பகுதியை சேர்ந்தவர் ஃபிரங்ளின். இவர் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு (Central Intelligence Agency) ல் முக்கிய அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது சுயசரிதையில் தான் பணியாற்றிய சி.ஐ.ஏ. பற்றி கூறிப்பிட்டுள்ளார்.
அதில் ,” நான் மத்திய புலனாய்வு துறையில் 1972 முதல் 1989 வரை பணியாற்றினேன். அப்போது பல்வேறு போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளேன். அரசின் பறக்கும் வாகனங்களை பயன்படுத்தி கோகேன் மற்றும் கஞ்சா போன்ற பொருட்களை கடத்தியிருக்கிறேன். இதற்கு ராணுவத்தின் முக்கிய இடமான 51 மையமாக பயன்படுத்தப்பட்டது. மேலும் வி இசட்-9 அவ்ரோகாரின் முன்னெற்றமடைந்த ரகமான வீ இசட்-13 விமானம் இதற்கு பயன்படுத்தப்பட்டது. இதை 1958 ஆம் ஆண்டு கனடாவின் அவ்ரோ விமான உற்பத்தி நிறுவனம் தயாரித்தது. அது மிகவும் சுவாரசியமாக இருக்கும். நாங்கள் போதை பொருளை மெக்சிகோவிலிருந்து நெவேடா வரை எடுத்து செல்வோம். நாங்கள் விமானத்தில் செல்லும் போது மக்கள் எங்களை வேற்றுக்கிரகவாசி என நினைத்துக்கொள்வர்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தான் மொத்தமாக 2000 டன் கோகேன் கடத்தியதாக தெரிவித்துள்ளார். இதற்கு பொதுவாக நெவேடாவில் அமெரிக்காவின் விமானப்படை அமைக்கபட்டுள்ள இடமான 51 அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அவரது சுயசரிதையின் 618 வது பக்கத்தில் இக்கடத்தல் சம்பவம் பற்றி தெளிவாக எளிதியுள்ளார். அதில் நடந்த தேதி, விமானப்பாதை மற்றும் சரக்கு வழிப்பாதைகள் ஆகியவற்றைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்.இது போன்ற கடத்தலில் சி.ஐ.ஏ. ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டு புதிதன்று ஆனால் விமானங்கள் பயன்படுத்தப்பட்டது என்று கூறப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இது பற்றி சி.ஐ.ஏ. வின் தற்போதைய செய்திதொடர்பாளரிடம் கேட்கையில் அவர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.மேலும் இவை அனைத்தும் அபத்தமான கற்பனைகள் என தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply