சசிகலா மீது மீண்டும் வழக்கு பதிவு

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் வி.கே.சசிகலா மீது எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக பெங்களூரு சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் அவர் ஆஜரானதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

1996- 1997 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தொலைக்காட்சி நிறுவனத்திற்காக வெளிநாடுகளில் இருந்து ஒளிபரப்பு சாதனங்கள் கொள்வனவு செய்யப்பட்டதன் மூலம் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

இன்று காணொளி காட்சி மூலம் ஆஜரான சசிகலா, வினவப்பட்ட 50 க்கும் மேற்பட்ட வினாக்களுக்கு இல்லை தெரியாது என்ற பதில்கள் மாத்திரமே வழங்கியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply