பங்களாதேஷில் இலங்கை மாணவிக்கு நேர்ந்த அவலம்

பங்களாதேஷில் வைத்தியக் கல்வியை மேற்கொண்டு வரும் இலங்கை யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.பங்களாதேஷைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக, அந்த நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.

சிதகொங் நகரிலுள்ள ஹோட்டல் அறையொன்றில் வைத்து சந்தேகநபர் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக, பாதிக்கப்பட்ட யுவதி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

முதலில் தொலைபேசி மூலம் அவருடன் பேசத் தொடங்கியதாகவும், பின்னர் அவர் அழைத்ததன் பேரில், தான் தங்கியுள்ள விடுதிக்கு அருகில் இருந்த ஹோட்டலுக்கு சென்றதாவும் குறித்த பெண் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

இதனையடுத்து, கைதான சந்தேகநபர் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக, பங்களாதேஷ் ஊடகச் செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply