கத்தார் மீது தடையை விலக்க வளைகுடா நாடுகள் நிபந்தனை
இம்மாதத் தொடக்கத்தில் இருந்து கத்தார் மீது தடை விதித்திருந்த வளைகுடா நாடுகள் கத்தாரிடம் என்ன எதிர்பார்க்கின்றன என்பது குறித்து ஒரு பட்டியலை அளித்துள்ளன. 13 விஷயங்கள் அடங்கிய அந்த பட்டியலில், அல் ஜஸீரா தொலைக்காட்சியை மூடுவது, ஒரு துருக்கி ராணுவ தளத்தை மூடிவிட்டு, இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடனான எல்லா தொடர்புகளையும் துண்டிப்பது போன்றவை அடங்கும்.
கத்தாருக்கும், வளைகுடா நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்து கொண்டிருக்கும் குவைத் மூலம் இந்த பட்டியல் கத்தாருக்கு அளிக்கப்பட்டது.
சௌதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள், கத்தார் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டுகின்றன, இதை காத்தார் மறுத்துள்ளது.
இந்த நாடுகள் கத்தார் மீது தங்களுக்கு இருக்கும் குறைகளை பற்றிய விவரங்களை வெளியிடவில்லை என்பது புதிராக உள்ளது என்று இந்த வாரத்தின் தொடக்கத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply