மெக்காவில் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு?
மெக்கா புனித தலத்தின் மீது தீவிரவாதிகள் நடத்தவிருந்த தாக்குதலை சவூதி காவல்துறையினர் முறியடித்தாக செய்திகள் தெரிவிக்கின்றன. உள்துறை அமைச்சகத்தினை சுட்டிக்காட்டி தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில் ரமலான் மாதத்தின் கடைசி நாளன்று இலட்சக்கணக்கானோர் மெக்கா புனித தலத்தில் கூடுவார்கள். அதைக் குறிவைத்தே தாக்குதல்கள் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தற்கொலைப்படையைச் சேர்ந்த ஒருவர் தடையை மீறி செல்லும்போது குண்டு வெடித்தது. இதனால் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து 11 பேர் காயமடைந்ததாகவும், இதில் ஐவர் காவல்துறையினர் என்றும் கூறப்படுகிறது. அரசு தொலைக்காட்சி உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையை சுட்டிக்காட்டி காணொலியை ஒளிபரப்பியது.
சமூக வலைதளங்களில் வெளியான படங்களில் கட்டட இடிபாடுகளில் ஒருவரது தலை துண்டிக்கப்பட்டு கிடப்பது காண்பிக்கப்படுகிறது. மேலும் சந்து ஒன்றில் கட்டட இடிபாடுகள் நிறைந்து கிடப்பதும் காணொலியில் காட்டப்படுகிறது.
கடந்த ஆண்டு மற்றொரு புனித தலமான மெதினா நகரில் நான்கு பேர் தீவிரவாத தாக்குதலில் இறந்தனர். அதே நாளில் சவூதி முழுவதும் நடந்த மூன்று தாக்குதலில் மெதினாவில் நடந்ததும் ஒன்றாகும்.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சவூதியில் அடிக்கடி நடந்து வரும் தாக்குதல்களுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply