பாகிஸ்தானில் கடும் வறட்சியால் ஊரை காலி செய்யும் மக்கள்
பாகிஸ்தானில் உள்ள மக்ரான் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக சரியாக மழை பெய்யவில்லை.ஏற்கனவே இந்த பகுதியில் சரியாக மழை பெய்வது இல்லை. 2 ஆண்டுகளாக தொடர்ந்து மழை பெய்யாததால் அங்கு கடுமையான வறட்சி நிலவுகிறது.அனைத்து இடங்களிலும் ஏரி, குளங்கள் முற்றிலும் வற்றி விட்டன. இதனால் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் அல்ல, குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை.குடிநீருக்காக பல இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தனர். ஆனாலும், நிலத்தடி நீர் குறைந்து விட்டதால் அந்த கிணறுகளிலும் தண்ணீர் கிடைக்கவில்லை.
இதனால் கிராம மக்கள் வேறு வழி தெரியாமல் ஊரை விட்டு வெளியேறி வருகிறார்கள். கவதார் மாவட்டத்தில் கிராம பகுதிகளை சேர்ந்த 70 சதவீத மக்கள் வெளியேறி இருக்கிறார்கள்.
இதேபோல் பஞ்ச் கார் பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. விரைவில் அங்கு மழை சீசன் தொடங்க உள்ளது. அப்போதும் மழை சரியாக பெய்யாவிட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply