ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாட்டில் அரசாங்கம் மௌனம் சாதிக்க கூடாது : ரவி
அடிப்படைவாதிகள் குழுவொன்று நாட்டு மக்களை பணயக் கைதிகளாக வைத்துக் கொண்டு, ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் செயற்படுவதை, மக்கள் ஆதரவு பெற்ற அரசாங்கமென்ற வகையில் இதனைப் பார்த்துக் கொண்டு மௌனம் சாதிக்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.ஜனநாயகத்தை காட்டுத்தனமான சுதந்திரமாக கருதிக் கொண்டு, சட்ட முரணான செயற்பாடுகளில் ஈடுபடும் எந்தவொரு நபராயினும், குழுவாயினும் கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கி , நாட்டுக்குள் அராஜக நிலைமையை உருவாக்க செயற்படும் குழுக்களை சட்டத்தின் முன் கொண்டுவர பொலிஸார் இதனை விட வேகமாக செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெல் இன் சுகதுக்கம் விசாரிக்க நேற்று (23) அவருடைய வீட்டுக்குச் சென்று விட்டு, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply