வடக்கு குழப்பங்களுக்கு காரணம் யார்?
வடக்கு மாகாணசபையில் அண்மையில் குழப்பங்கள் ஏற்பட்ட போது அதனைத் தீர்த்து வைப்பதில் இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்குலக தூதுவர்களும் ஆர்வம் காட்டியதாக தகவல்கள் வெளியாகின.இந்த விவகாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலையிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அதற்குக் காரணம் இந்தக் குழப்பங்கள் இலங்கையின் தேசிய அரசியலிலும் பிராந்திய அரசியலிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சம் அவர்களிடம் காணப்பட்டது.
மேற்குலக மற்றும் இந்திய ஆசீர்வாதத்துடன் கொழும்பில் நிகழ்த்தப்பட்ட ஆட்சி மாற்றத்தின் அனுகூலங்களை இந்தக் குழப்பம் கெடுத்துவிடக் கூடும் என்றும் அவர்கள் கருதினர்.
அதனால் தான் இரா.சம்பந்தன் தலையிட்டு இந்தக் குழப்பங்களைத் தீர்க்க வேண்டும் என்று அவர்களால் வலியுறுத்தப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.
இந்த நிலையில் வடக்கு மாகாணசபையில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு இந்தியாவே பின்னணிக் காரணம் என்று சிலர் குற்றம் சாட்டியிருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்து அரசறிவியல் துறை விரிவுரையாளர் ஒருவர், இந்தியாவின் தேவைக்கேற்பவே முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை வெளியேற்றுவதற்கு தமிழரசுக்கட்சியினர் முயற்சிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply