மேனன், நாராயணன் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன் மற்றும் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஆர். கே. நாராயணன் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று நண்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பு சுமுகமானதாக அமைந்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.இச்சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் வடக்கின் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பாக இந்திய ராஜதந்திரிகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ தெளிவுபடுத்தியதாகவும், அரசாங்கத்தின் மனி தாபிமான நடவடிக்கைகளுக்காக இந்திய ராஜதந்திரிகள் ஜனாதிபதிக்குப் பாராட்டுகளைத் தெரிவித்ததாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது. இலங்கையும் இந்தியாவும் ஏற்கனவே மேற்கொண்டுள்ள இணக்கப்பாட்டுக்கமைய வன்னி நிலைவரங்கள் தொடர்பாக இருநாட்டு ராஜதந்திரிகளும் அடிக்கடி சந்தித்துக் கலந்துரையாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதன் ஒரு அம்சமாகவே நேற்றைய சந்திப்பும் இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது இலங்கைக்கு உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட உதவிகளைத் தொடர்ச்சியாகச் செய்துவரும் இந்திய அரசாங்கத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்தார். இதனையடுத்து, இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பாக இந்திய ராஜதந்திரிகள் ஜனாதிபதியைப் பாராட்டியதாகவும் மேற்படி ஊடகப்பிரிவு தெரிவித்தது.நேற்றைய இச்சந்திப்பில் ஜனாதிபதியுடன் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply