புதிதாக 12 சுதந்திர வர்த்தக வலையங்கள் அமைப்பதற்கு திட்டம்

நாட்டில் மேலும் பன்னிரண்டு சுதந்திர வர்த்தக வலையங்களை அமைப்பதற்கு திட்டமிட்டு உள்ளதாக தொழில் அபிவிருத்தி முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவிக்கின்றது. புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள இவை பாரிய முதலீட்டு வலையங்களாகவே  அமைக்கப்படவுள்ளன.

இந்தத்திட்டத்தின் முதற்கட்டமாக ஐந்து சுதந்திர வர்த்தக வலையங்களின் நிர்மாணப்பணிகள் இவ்வருட இறுதிக்குள்  ஆரம்பிக்கப்படவுள்ளன. இத்திட்டத்திற்காக அரசாங்கம் 11 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
திருகோணமலை, புத்தளம், தம்புள்ளை,மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய  பிரதேசங்களில் இப்புதிய சுதந்திர வர்த்தக வலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவிக்கின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply