புகழ் பெற்ற `பிள்ளை பிடிகாரர்` பாப்பா சுட்டுக் கொலை
புலிகள் கிளிநொச்சியில் கோலோச்சிய காலத்தில் விளையாட்டுத் துறை பொறுப்பாளராக இருந்தவரும், வன்னியில் ஆயிரக்கணக்கான குடும்பங்களை காலமெல்லாம் கண்ணீர் விட்டு அழவைத்த புலிகளின் `ஆள் சேர்ப்பு` பிரிவுக்கு பொறுப்பாளராகவும் இருந்தவரும், பதினென்மங்களைத் தாண்டாத தமது பிஞ்சுகளை பிடுங்கி எடுத்துச் சென்ற போதெல்லாம் வன்னியில் வாழ்ந்த மக்கள் வயிரெரிந்து மண்ணள்ளி எறிந்து திட்டிய முதன்மை `பிள்ளை பிடிகாரர்` வேலழகன் என்றழைப்பட்ட பாப்பா தனது குடும்ப உறுப்பினர்களுடன் புதுமாத்தளன் பகுதியில் இருந்து சில தினங்களுக்கு முன் கடல் வழியாக படகு மூலம் தப்பிச் செல்ல முற்பட்ட போது சக புலிகளின் உறுப்பினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
முன்னை நாள் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையனின் சகோதரியொருவர் சில தினங்களுக்கு முன் தனது குடும்பத்துடன் புலிகளின் பிடியில் இருந்து தப்பி மக்களோடு மக்களாய் வெளியேறி தற்போது சாகவச்சேரியில் உள்ள இடைத்தங்கல் முகாமில் தங்கி உள்ளார்.
பாதுகாப்பு பிரதேசத்தில் இருந்து வெளியேற முற்பட்ட மன்னார் மாவட்ட அருள் தந்தை வசந்தசீலன் புலிகளால் சுடப்பட்டு தனது வலது காலை இழந்துள்ள நிலையில் படையினரால் மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply