பாதுகாப்பு வலயத்திலுள்ள வலைஞர்மடத்தை படையினர் விடுவித்துள்ளனர்

மனிதாபிமான படை நடவடிக்கைகளில் இறுதிக் கட்டத்தில் ஈடுபட்டு வரும் 58வது டிவிசன் படையினர் வலைஞர்மடம் பகுதியைக் கைப்பற்றி புலிகளின் கையில் சிக்கியிருந்த மேலும் பல பொது மக்களை விடுவித்துள்ளனர். இராணுவக் கொமான்டோக்கள், விசேடபடையினர், 10வது காலாற் படையினர் மற்றும் 12வது கெமுனுப்படையினர் ஆகியோர் நேற்று (ஏப். 25)வலையர்மடம் பகுதிக்குள் நுளைந்து அப்பகுதியின் பாதுகாப்பை இன்று (ஏப். 26) காலை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் 500 மேற்பட்ட பொதுமக்களையும் விடுவித்துள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. வலைஞர்மடம் புலிகளின் கடைசி மறைவிடமான வெள்ளா முள்ளி வாய்க்காலிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply