வலைஞர்மடத்தில் 23 புலி உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் சரண்
படையினர் இன்று (ஏப். 26) காலை வலைஞர்மடம் பகுதியை விடுவிக்கும் மனிதாபிமான படை நடவடிக்கை மேற்கொண்ட போது அப்பகுதியில் 23 புலி உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் இராணுவத்திடம் சரண் அடைந்துள்ளனர். 17 ஆண்களும் 6 பெண்களுமாக மொத்தம் 17 புலி உறுப்பினர்களை இராணுவம் சுற்றி வளைத்ததை அடுத்து அவர்கள் அனைவரும் சரணடைந்ததாக இராணுவ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 300 அதிகமான பொது மக்களும் மீட்கப்பட்டுள்ளனர்.
ஆயுதங்களுடன் சரணடைந்த 23 புலி உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதியில் மீட்கப்பட்ட மக்கள் அனைவரும் முன்னரனிலுள்ள இராணுவத்தால் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply