ஒபாமாவின் மாதச்சம்பளம் ரூ.16 லட்சம்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் ஆண்டு சம்பளம் கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் ஆகும். அவரது மாதச்சம்பளம் ரூ.16 லட்சம் ஆகும். இதுதவிர படிகள் தனி. மற்ற சலுகைகள் சேர்க்கப்படவில்லை. இதுதவிர செலவுக்கான படியாக 50 ஆயிரம் டாலர் வழங்கப்படும். அதாவது 25 லட்சம் ரூபாய் ஆகும். இந்த தொகையில் செலவிடப்படாத பணம் அரசாங்க கஜானாவில் சேர்க்கப்பட்டு விடும்.

அமெரிக்க ஜனாதிபதியின் சம்பளம் கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் தான் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டது. அது வரை ஆண்டு சம்பளம் 2 லட்சம் டாலராகத்தான் இருந்தது. அதற்கு பிறகு தான் அது 4 லட்சம் டாலராக உயர்ந்தது. இந்தியாவில் ஜனாதிபதியின் சம்பளம் கடந்த செப்டம்பர் மாதம் தான் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. துணை ஜனாதிபதியின் சம்பளம் ரூ.ஒரு லட்சத்து 25 ஆயிரமாகவும் கவர்னர்களின் சம்பளம் ரூ.ஒரு லட்சத்து 10 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டது. அதற்கு முன்பு மாதச்சம்பளம் ரூ.50 ஆயிரமாகத்தான் இருந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply