கண்டி தமிழ் வர்த்தகர்களிடம் கப்பம் பெறுவோரை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துக: அமைச்சர் வி. முரளிதரன்

தனக்கும் தனது கட்சித் தொண்டர்களுக்கும் இழுக்கை ஏற்படுத்தும் வகையில் கண்டியில் தமிழ் வர்த்தகர்களை அச்சுறுத்தி கப்பம் பெற முயற்சிக்கும் நபர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு அமைச்சர் வி. முரளிதரன் பொலீசாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கருணா குழுவினர் என தம்மை கூறிக்கொண்டு கண்டியில் தமிழ் வர்த்தகர்களை அச்சுறுத்தி ஒரு லட்சம் முதல் ஐம்பது லட்சம் வரை கப்பல் கேட்கும் கும்பல்கள் பற்றிய தகவல்கள் வெளியானதை அடுத்தே அமைச்சர் வி. முரளிதரன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

கப்பம் பெறவேண்டிய தேவை எமக்கில்லை எனக்கூறிய கருணா அம்மான் இவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டு மென்றும் தெரிவித்துள்ளார். கண்டியில் கப்பம் கோரும் விடயம் பற்றி தெரிய வருவதாவது, வர்த்தகர்களை அச்சுறுத்தி வங்கிக் கணக்கிற்கு பணம் வைப்பிலிடப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலீசார் மேற்கொண்ட விசாரணையின் போது சிங்கள பெண்ணொருவரும், முஸ்லிம் இளைஞர் ஒருவரும் தொடர்பு என கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரும் பொலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வர்த்தக சங்கத்தினர் கண்டி பொலீஸ் பொறுப்பதிகாரி, மத்திய மாகாண பிரதிப் பொலீஸ் மாஅதிபர் ஆகியோரை தொடர்பு கொண்டு முறையிட்டுள்ளனர். இதுவரை பல வர்த்தகர்கள் அச்சம் காரணமான பணத்தினை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply