பாகிஸ்தானில் அதிபர் சர்தாரியுடன் நவாஸ் ஷெரீப் சந்திப்பு

பாகிஸ்தானில் ஆளும் கூட்டணியில் இடம் பெற்று இருந்த ஆசிப் அலி சர்தாரியும், முஸ்லிம் லீக் கட்சி தலைவர் நவாஸ் ஷெரீப்பும் நீதிபதிகள் மீண்டும் நியமிக்கப்படும் பிரச்சினையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அதன் பிறகு அவர்கள் இருவரும் சந்திக்கவில்லை. இந்த நிலையில் 2 மாதத்துக்கு பிறகு இருவரும் நேற்று முதல் முறையாக சந்தித்து பேசினார்கள். அப்போது நவாஸ் ஷெரீப்புக்கு சர்தாரி விருந்து கொடுத்தார்.

அப்போது ஜனநாயக அமைப்பை சீர்குலைக்கும் சக்திகளுக்கு எதிரான முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக நவாஸ் ஷெரீப் உறுதி அளித்தார். அதோடு முஷரப் ஆட்சிக்காலத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்றும் அவர் அதிபரை வலியுறுத்தினார். அதோடு ஜனாதிபதியிடம் உள்ள சர்ச்சைக்குரிய அதிகாரங்களை ரத்து செய்யவேண்டும் என்றும் அவர் கோரினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply