சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் முதலமைச்சர் பழனிசாமி
71 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை தலைமை செயலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஏராளமான மக்கள் கூடி இருந்தனர்.கோட்டை வளாகத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி 8.15 மணியளவில் வருகை புரிந்தார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினரின் சிறப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் கோட்டை வளாகத்தில் சரியாக 8.30 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசிய கொடியை ஏற்றிவைத்தார். பின்னர், தனது முதல் சுதந்திர தின விழா உரை நிகழ்த்தினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை முதலில் நினைவு கூர்ந்து தனது உரையை அவர் தொடங்கினார்.
முதலமைச்சராக இருந்து சென்னை கோட்டை கொத்தளத்தில் எடப்பாடி பழனிச்சாமி கொடியேற்றுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply