சேர் ஜோன் ஹோம்ஸ் வெளிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகம் சேர் ஜோன் ஹோம்ஸ் இன்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இன்று காலை வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோஹண, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அகியோரும் கலந்துகொண்டனர்.அதேவேளை சேர் ஜோன் ஹோம்ஸ் இன்று நண்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சேர் ஜோன் ஹோம்ஸ், வெளிவிவகார செயலாளர் கலாநிதி பாலித்த கோஹண, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் அரசாங்க சமாதான செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க ஆகியோரையும் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்த பேச்சுக்களின்போது ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான பணியாளர் குழு ஒன்றை பாதுகாப்பு வலயத்துக்கு அனுப்புவது குறித்து ஐ.நாவின் செயலாளர் தெரிவித்த விடயம் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சு தகவல்கள் தெரிவித்தன.

பாதுகாப்பு வலயத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான குழு செல்வதைவிட அப்பகுதியில் உள்ள மக்களை மீட்பதே தற்போது முக்கிய தேவையாக உள்ளதாக இலங்கை அரசாங்க தரப்பில் கூறப்பட்டதாகவும் சேர் ஜோன் ஹோம்ஸ் அதனை ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply