இவ்வருட வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளவர்கள் மாத்திரமே அடுத்த தேர்தலில் வாக்களிக்க முடியும்

2017ம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பின் வரைபு நகல் நிறைவுக்கு வந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மேலும் பொது மக்களுக்கு அந்நகலை தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளவாயிலாக (www.elections.gov.lk) பார்வையிட முடியும் என தெரிவித்துள்ளது.மேலும், 2016ம் ஆண்டின் வாக்காளர் இடாப்பு, புதிதாக உட்சேர்க்கப்பட பரிந்துரைக்கப்பட்ட மற்றும் நீக்கப்பட்ட பெயர்களை கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களிலும் பரிசீலிக்க முடியும் என தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு நகரம், கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட நகர் மற்றும் நகர்சார் பிரதேசங்களில் வாக்காளர் இடாப்பில் உட்சேர்த்துக் கொள்வதில் கணிசமான அளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ளதால், 2017ம் ஆண்டின் வாக்காளர் இடாப்பில் தமது பெயர் உற்சேர்க்கபட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளுமாறும், எதிர்வரும் தேர்தலின் போது 2017ம் ஆண்டின் வாக்காளர் இடாப்பில் பெயர் காணப்படுகின்றவர்களுக்கு மாத்திரமே வாக்களிக்க முடியும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏதேனும் ஒரு காரணத்தினால் பெயரானது 2017ம் வாக்காளர் இடாப்பில் உட்படாதவிடத்து உடனடியாக உரிய தேர்தல் அலுவலகத்திற்கு அறியத்தருமாறு தேர்தல் ஆணைக்குழு 18 வயது பூர்த்தியான அனைத்து இலங்கைப் பிரஜைகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply