வெள்ளிக்கிழமை சட்டமூலத்துக்கு எதிராக செயற்படுங்கள் : மஹிந்த அறிக்கை
பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள உள்நாட்டு இறைவரிச் சட்ட மூலத்துக்கு எதிராக செயற்படுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.எதிர்வரும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் இச்சட்ட மூலம் விவாதிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் இன்று அவர் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
தற்போது நடைமுறையில் இருக்கின்ற 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க தேசிய உள்நாட்டு இறைவரிச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமூலம் ஒன்று 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்பட உள்ளது. இதற்கு தாம் எதிராக வாக்களிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை ஏன் எதிர்ப்பது என்பதற்கான விளக்கத்தையும் அவ்வறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இச்சட்டம் அமுலுக்கு வந்தால், அனைத்து வணக்கஸ்தலங்களுக்கும் வரி விலக்களிக்கப்பட்டிருப்பது நீக்கப்பட்டு, வணக்கஸ்தலங்கள் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களுக்கும் 14% வரி அறவிடப்பட உள்ளது.
அதேபோல் இந்த சட்டமூலத்தினூடாக சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள 12% வரி 14% ஆக அதிகரிக்கப்பட உள்ளது.
அதேவேளை இந்த வருமான வரி சட்டமூல முன்மொழிவில் உள்ளடக்கட்டுள்ள விடயங்கள் ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளே அன்றி ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளுக்கு உடன்பாடான அம்சங்கள் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
இது போன்ற பல காரணங்களுக்காக இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் போது அனைத்து ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களும் உறுப்பினர்களும் எதிராக வாக்களிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply