நெதர்லாந்து: எரிவாயு சிலிண்டர்களுடன் பிடிபட்ட மர்மவேன் – பாதுகாப்பு கருதி இசைக்கச்சேரி ரத்து

நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாம் நகரில் எரிவாயு சிலிண்டர்கள் அடங்கிய மர்மவேன் போலீசாரால் பிடிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு நடைபெற இருந்த இசைக்கச்சேரி பாதுகாப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் மேற்கு ஹோலாந்து மாகாணத்தில் இருக்கும் ரோட்டர்டாம் நகரில் அமெரிக்காவின் பிரபல இசைக்குழுவான அல்லா-லாஸ் கச்சேரி நடைபெற இருந்தது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றிருந்த நிலையில், அந்நகரில் எரிவாயு சிலிண்டர்கள் நிரம்பிய வேன் ஒன்று போலீசாரால் கைப்பற்றப்பட்டது.

ஸ்பெயின் நாட்டின் பதிவு எண்களை கொண்ட அந்த வேனின் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக இசைக்கச்சேரி ரத்து செய்யப்பட்டது. கடந்த வாரம் பார்சிலோனா தாக்குதலையடுத்து கேட்டோலேனியா நகரில் இதேபோல எரிவாயு சிலிண்டர்கள் அடங்கிய லாரி போலீசாரால் கைப்பற்றப்பட்டது.

ஆனால், கேட்டோலேனியா நகர் சம்பவத்திற்கும் தற்போதைய நிகழ்வுக்கும் தொடர்பு இல்லை என அந்நகர போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அந்நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply