புதிய கடற்படைத் தளபதியிடம் 500 மில்லியன் நட்டஈடு கோருகிறார் முன்னாள் கடற்படைத் தளபதி
கடற்படைத் தளபதி ட்ரவிஸ் சின்னய்யாவிடம் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட 500 மில்லியன் நட்டஈடு கோரியுள்ளார். குற்ற விசாரணைப் பிரிவில் ட்ரவிஸ் சின்னய்யா அளித்த வாக்கு மூலம் தொடர்பில் இவ்வாறு வசந்த கரன்னகொட நட்டஈடு கோரியுள்ளார்.சட்டத்தரணி வசந்த விஜேவர்தனவின் ஊடாக, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட நிபந்தனைக் கடிதம் அனுப்பி வைத்துள்ளார். தமது கட்சிக்காரருக்கும் அவரது குடும்பத்திற்கும் எதிராக மிகவும் அவதூறான கருத்துக்களையும் பொய்யான குற்றச்சாட்டுக்களையும் சுமத்தியுள்ளதாக ட்ரவிஸ் சின்னய்யா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை சித்திரவதை முகாமில் சந்தேகநபர்கள் கொலை செய்யப்பட்டதாகவும் இது குறித்து அப்போதைய கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட அறிந்திருந்தார் எனவும் தற்போதைய கடற்படைத் தளபதி ட்ரவிஸ் சின்னய்யா சுமத்திய குற்றச்சாட்டு பொய்யானது என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனைக் கடிதம் கடந்த 13ம் திகதியிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொய்யான குற்றச்சாட்டு சுமத்தியமைக்காக 500 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு செய்யத் தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிபந்தனைக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply