ஈராக்கில் உச்சகட்ட சண்டை: ஐ.எஸ் பிடியில் இருக்கும் டெல் அஃபார் நகரை நெருங்கியது அரசுப்படை

ஈராக் நாட்டில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் டெல் அஃபார் நகரின் மையப்பகுதியை உச்சகட்ட சண்டை நடத்தி அரசுப்படைகள் நெருங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினர் உலகம் முழுவதும் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்கும் பணியில் அமெரிக்கா தலைமையில் கூட்டுப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈராக் நாட்டில் மொசூல் உள்ளிட்ட முக்கிய நகர்களை ஈராக் அரசுப்படையினர் மீட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள டெல் அஃபார் உள்ளிட்ட சில பகுதிகளை தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மீட்பதற்காக உச்சகட்ட போர் நடந்து வருகின்றது. இந்நிலையில், டெல் அஃபார் நகரில் ஐ.எஸ் அமைப்பினர் வைத்திருந்த தடுப்புகளை தகர்த்து நகரின் மையப்பகுதி வரை அரசுப்படை வீரர்கள் முன்னேறியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்நகரில் சுமார் 2000 முதல் 4000 தீவிரவாதிகள் இருக்கலாம் எனவும், 50 ஆயிரம் பொதுமக்கள் நகரில் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து சில நாட்களில் நகர் முழுவதையும் அரசுப்படையினர் மீட்டு விடுவார்கள் என்று ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply