தேசிய வேலைத்திட்டத்தில் நாட்டை மேம்படுத்தும் விரிவான பணி
´புரவெசி அத்வெல்´ (பிரஜைக்களுக்கான உதவிக்கரம்) மற்றும் ´கிராம சக்தி் ஆகிய தேசிய வேலைத்திட்டங்கள், நாட்டை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லும் விரிவான பணிகளை முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.நாட்டை மேம்படுத்துவதற்கான சவால்களின் மத்தியில் அந்த சவால்களுக்கு முறையான வகையில் முகம்கொடுப்பதற்கு உகந்த தரப்பினர் அவசியம் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பிரஜைகளுக்கான உதவிக்கரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயங்களை கூறினார்.
பிரஜைகளுக்கான உதவிக்கரம் இன்றைய சமூகம் மற்றும் நாளை பிறக்கவிருக்கும் எதிர்கால சந்ததிக்காக தூய்மையான எண்ணங்களுடன் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டமாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கு அமைய கிராமிய மக்களின் அபிவிருத்தியை நோக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பிரஜைகளுக்கான உதவிக்கரம் வேலைத்திட்டம் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் செயற்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply