கடவுளைத் தவிர யாராலும் எங்களை மிரட்ட முடியாது: டிடிவி தினகரன்
“கடவுளைத் தவிர யாராலும் எங்களை மிரட்ட முடியாது. எனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்ற தியாக உணர்வோடு புதுச்சேரி சென்றுள்ளனரே தவிர, யாருக்கும் பயந்து ஓடவில்லை” என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.அதிமுக அணிகள் இணைப்புக்குப் பின்னர் ஆளுநரைச் சந்தித்த டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் முதல்வர் பழனிசாமியை மாற்றக் கோரி கடிதம் கொடுத்தனர்.
பின்னர், புதுச்சேரி சென்றனர். கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் தங்கியுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அவ்வப்போது ஊடகங்களுக்கு பேட்டியளித்துவருகின்றனர்.
தனது ஆதரவு நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்களை முதல்வர் பழனிசாமிக்கு எதிராக பேசவிட்டு, தொடர்ந்து தினகரன் மவுனம் காத்து வருவதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 26-ம் தேதி) சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “கடவுளைத் தவிர யாரும் எங்களை மிரட்ட முடியாது. எனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்ற தியாக உணர்வோடு புதுச்சேரி சென்றுள்ளனரே தவிர யாருக்கும் பயந்து ஓடவில்லை. என்னுடன் துணை நிற்பவர்கள்தான் உண்மையில் தர்மத்தின் பக்கம் நிற்கிறார்கள். தமிழக அரசின் சூழலை இந்தியாவே கவனித்து வருகிறது. அதிமுகவின் பொதுச் செயலாளரை நீக்குவேன் என்று கூறியவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். அதற்காகவே ஆளுநரிடம் எனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கடிதம் கொடுத்துள்ளனர். நியாயம் நிச்சயம் வெல்லும்; ஆளுநர் நல்ல நடவடிக்கை எடுப்பார்” எனக் கூறினார்.
முன்னதாக இன்று காலை தினகரனின் அடையாறு இல்லம் அருகே வைக்கப்பட்டிருந்த பேனர் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply