அரச சேவையாளர்களுக்கு சுயாதீனமாக செயற்பட வாய்ப்பு வழங்கவும் : தேசிய தொழிற்சங்க சம்மேளனம்

அரச பணியாளர்களுக்கு சுயாதீனமாக செயற்பட வழங்க வேண்டும் என தேசிய தொழிற்சங்க சம்மேளனம் கோரியுள்ளது.அரசியல் ரீதியான நியமனங்கள் மற்றும் அரசியல் ரீதியான தொழிற்சங்கங்கள் காரணமாக அரச பணிகள் பொதுமக்கள் பாரிய அதிருப்திக்கு உள்ளாகியிருப்பதாக அந்த சம்மேளம் குறிப்பிட்டுள்ளது.

அரச பணிகளை சுயாதீனமாக முன்னெடுத்துச் செல்வதற்காக அரசியல் தலையீட்டுடனான நியமனங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் பரீட்சைகள் ஊடாக மற்றும் பொலிஸ் அறிக்கைகளை உள்ளடக்கிய வகையில் அனைத்து ஆவணங்களையும் கவனத்தில் கொண்டு தொழில்வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் அந்த சம்மேளனம் மேலும் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply