லண்டனில் இந்திய தூதரகம் புலிகளின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது
இந்திய அரசுக்கு எதிராக சுலோகங்களை தாங்கி இன்று (ஏப். 27) காலை முதல் மத்திய லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று தொடர்கிறது. ஆர்ப்பட்டகாரர்கள் சிலர் இந்திய உயர் ஸ்தானிகர் கட்டிடத்தினுள் பலாத்தாரமாக நுழைய முயற்சித்ததாகவும் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கு செய்திகள் தெரிவிக்கின்றன.
வன்முறையில் ஈடுபட்ட சிலரை பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தியும் உள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களில் ஐவர் தூதரகத்தின் வாசல் கதவொன்றின் கண்ணாடியையும் யன்னல் கண்ணாடிகள் சிலவற்றையும் உடைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் இல்லாத பட்சத்தில் தம்மால் தொடர்ந்து அனுமதிக்க முடியாதென லண்டன் மாநகர காவல் துறை தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்தவர்கள் தாம் அமைதியான முறையில் இருப்பதாக உறுதியளித்ததால் ஆர்ப்பாட்டத்தை மாலை 5 மணி வரை தொடர பொலிசார் அனுமதித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply