வன்னியில் இடம்பெயர்ந்தோர்க்கு நூறு கோடி இந்திய ரூபா நிதியுதவியினை வழங்க இந்திய அரசு முன்வந்துள்ளது

வன்னியில் போரினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடம் தேடி அப்பாவி மக்கள் வெளியேறி வருகின்றனர். மேலும் உண்ண உணவு, தங்க இடவசதியின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் ரூ.100 கோடி நிவாரணமாக வழங்க பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் இந்த பேருதவி குறித்து பல்வேறு தரப்பினர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பு உருவாகியுள்ளது. அண்மையில் அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இந்திய வெளியுறவு செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோரை புதுடில்லியில் வைத்து சந்தித்திருந்த போது வன்னியில் இடம் பெயர்ந்த மக்களின் உடனடி நிவாரணப் பணிகளுக்காகவும் மற்றும் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு என்பனவற்றிற்காகவும் இந்தியா உதவ வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply