முல்லைத்தீவிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் மூலம் நேற்றிரவு 527 பேர் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்

முல்லைத் தீவிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் மூலம் நேற்றிரவு 527 பேர் புல் மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். நோயாளர்கள்,காயமடைந் தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் ,உதவியாளர்கள் என 357 பேர் அழைத்து வரப்பட்டுள்ளதாக புல்மோட்டை தள வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை இலங்கைக்கான இந்திய தூதுவர் அலோக் பிரசாத் நேற்று புல்மோட்டைக்கு விஜயம் செய்தார்.இந்திய மருத்துவர் குழுவைக் கொண்ட வைத்தியசாலைக்கும் இடம் பெயர்ந்துள்ள மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கும் அவர் நேரில் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply